கோவில்பட்டியில் சாலை விபத்துக்களை ஏற்படுத்தும் நாய்கள் மற்றும் மாடுகளை அப்புறப்படுத்த கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் நூற்பாலைகள், தீப்பெட்டி ஆலைகள் , வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன..அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் என கோவில்பட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நகர் பகுதிக்குள் வந்து செல்கின்றன
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் சாலையில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு செய்யும் வகையிலும் விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் நூற்றுக் கணக்கான நாய்களும் மாடுகளும் சாலையில் மற்றும் வீதிகளில் நடமாடிக் கொண்டிருப்பதால் அதனை உடனடியாக நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், நகராட்சி ஆணையாளர் கமலாவை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.


