தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடந்தது.
நாளை 4.6.24 நடைபெற உள்ள தூத்துக்குடி பாராளுமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கையினை முன்னிட்டு வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


