துத்துக்குடியில் கருணாநிதி பிறந்த நாளையொட்டி கலைஞர் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தூத்துக்குடி திமுக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 101வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு உள்ள கருணாநிதி சிலைக்கு வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன்பொியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மாியாதை செய்து லட்டு வழங்கினார்கள்.
பின்னர் பழைய பேருந்துநிலையம் அருகில் அமைச்சர் கீதாஜீவன் கேக்வெட்டி பொதுமக்களுக்கு வழங்கியபின் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி ஊட்டசத்து பெட்டகம் வழங்கினார். மீளவிட்டான் காமராஜ் நகாில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவியும் நேசக்கரங்கள் பாசக்கரங்களில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உணவு வழங்கினார்


