கால்வாய் கிராமத்தில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது.
கால்வாய் கிராமத்தில் நடந்த கலைஞர் பிறந்த நாள் விழாவிற்கு ஊராட்சி கழக செயலாளர் நம்பி தலைமை வகித்தார். ஒன்றிய பிரதிநிதி சிவன், வீரபுத்திரன், மாரி, சுந்தரபாண்டியன், மாரிமுத்து, ஐயப்பன் மாரி உள்பட பலர் கலந்துகொண்டனர். திமுக கொடி யேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்புவழங்கி பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.
ஆறாம்பண்ணை கலைஞர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சேக் அப்துல் காதர் தலைமை வகித்தார். ஒன்றிய பிரதிநிதி அபுசாலி முன்னிலை வகித்தார். காஜா முகைதீன், பொருளாளர் அபுல் அசன், முகம்மது அலி ஜின்னா, அப்துல்கனி, சவூதி வாழ் திமுக தலைவர் ரகுமத்துல்லா, மாடக்கண் ,பெரியநாயகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.