தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் ரவுண்டானாவை அமைந்துள்ளது. சாலையின் ஓரத்தில் மழை நீர் தேங்கிய பள்ளத்தில் அருகிலிருந்து ஒரு நாய் ஒன்று சாலை செல்பவர்களை நோக்கி மிகச் சத்தமாகக் குரைத்துக் கொண்டு இருந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அருகே சென்று பாரத்தில் வயதான முதியவர் ஒருவர் பள்ளத்தில் தண்ணீரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து முதியவரைத் தூக்கிப் பார்த்த போது அவர் சாலை ஓரமாக நடந்து சென்றபோது வயது முதிர்வின் காரணமாக கால்யிரடி கீழே விழுந்து முகத்தில் அடிபட்டு ரத்த காயங்களுடன் பேசுவதற்குக் கூட சக்தியில்லாமல் காணப்பட்டார். சிறிது நேரத்தில் வந்த ஆம்புலன்ஸில் எற்றிவிடப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதியவரின் பெயர் முத்தையா வயது-77 சொந்த ஊர் சாயல்குடி மனைவி இறந்து விட்டதாகவும் கடந்த வருடங்களாகத் தருவை குளத்தில் கரை வேலை செய்வதாகவும் தன் மகன் போஸ் மருமகள் ராஜகனி தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் இருப்பதாகவும், மகனும் மருமகளும் முத்தையா புரத்தில் உப்பளத்தில் வேலை செய்ததாகவும், போல்டன் புரத்தில் வசித்துவரும் மச்சினன் ராஜா காவல்துறை ஆய்வாளராக வேலை செய்வதாகவும், தன் நெருங்கிய உறவுக்காரப் பெண் தங்கசெல்வி தெற்கு காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்ததாகவும், மற்ற பிள்ளைகள், உறவினர்கள் சாயல்குடியில் இருப்பதாகக் கூறியுள்ளார்.