வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் திருடிய மூன்று பேர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் திருடப்படுவதாக முறப்பநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்றைய தினம் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுக்கரையில் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சென்று பார்த்தனர். அங்கு இருசக்கர வாகனத்தில் மணல் திருடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை, மணி பாக்கியராஜ் ஆகிய மூவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட மணலையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


