வல்லநாடு அகரத்தில் சாலையில் சென்றவரை மதுபோதையில் கத்தியால் குத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே அகரம் பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அகரம் கிராமத்தைச் சேர்ந்த பலவேசம் என்பவர் குடிபோதையில் ரங்கராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பலவேசம் ரங்கராஜனை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பலவேசம் மீது முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


