மங்கலகுறிச்சியில் புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் பூவை.வி.மூர்த்தியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை.வி.மூர்த்தியார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பாளர் ஏற்பாட்டில் ஸ்ரீவைகுண்டம் மங்கலகுறிச்சியில் வீரவணக்கம் செலுத்தபட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தலைவர் அகஸ்டின் தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட அமைப்பாளர் குட்டிபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வீரவணக்க கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் ஜான், சின்னராசு, ஆகாஷ் பாண்டியன் மற்றும் மங்கலக்குறிச்சி ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.


