திருக்களூரில் இந்து முன்னனி சார்பில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வேண்டி இறைவனிடம் முறையிடும் நிகழ்ச்சி நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசாங்கம் வேண்டுமென்றே உள்ளோகத்தோடு தடை விதித்துள்ளது என்றும், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி வழங்க வேண்டியும், விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற வேண்டியும் கோவில்களில் பிராத்தனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருக்களூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் முன்பு இந்து முன்னனி தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் கோவில் முன்பு இந்து முன்னனியினர் பிராத்தனையில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெட்டுபெருமாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்து முன்னணி நாசரேத் நகர துணை தலைவர் தியாகராஜன் மகாலிங்கம், நகர பொதுசெயலாளர் சிவமுருகன், மூக்குபீறி கிளை செயலாளர் கோகு, வாழையடி கிளை தலைவர் சங்கர், செயலாளர் குருசாமி, முத்துநகர் கிளை துணை தலைவர் அழகு ரெத்தினம், ஆழ்வை மத்திய ஓன்றிய தலைவர் முருகன் துணை தலைவர் பொன்னையா ஆழ்வை மேற்கு ஒன்றிய தலைவர் பாதாளம், பொதுசெயலாளர் ஆழ்வார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


