திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற பாபநாசம் கோயில். அதன் வடக்கு 200 அடியில் பழைய சாலை உள்ளது. சாலையின் வளைவில், சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் பழைமையான ஒரு கல்பாலம் கட்டிடக்கலைக்கு சான்றாய் உள்ளது. கோரையாற்றின் மேல் கட்டப்பட்டுள்ள இப்பாலத்தின் பெயர் யானைப்பாலம் என்பர். யானைப்பாலத்திற்கு கீழ் கிழக்காகச் செல்லும் கோரையாறு, தெற்கிலிருந்து வடக்காக வரும் தாமிரபரணி ஆறு வளைந்து கிழக்கிநோக்கி பாகிறது. அதனுடன் கோரையாறு தாமிரபரணியுடன் இணைகிறது. இணைகிற, சங்கமிக்கிற இப்பகுதியை
திருநதி சங்கம தீர்த்தம் என வியாசர், தம் தாமிரபரணி மகாத்மியம் என்ற பழம் நூலில் விவரித்துள்ளார். இவ்விடம் புனிதமான பகுதியாகும். அக்காலமன்னர்கள் மலையாள நாட்டிற்கு போருக்கு செல்லும் போது இந்த ஆற்றில் இடையே தண்ணீர் அதிகம் வந்தமையால் யானைகளை ஆற்றில் நிறுத்தி அதன்மேல் போர்வீரர்களை இக்கரையிலிருந்து அக்கரைக்கு செல்ல பயன்படுத்தியதால் இது யானைப்பாலம் என பெயர் வர காரணமாயிற்று என்ற வரலாறும் இதற்கு உண்டு. அதோடு பாபநாசம் கோயில் கட்டுவதற்கும், பாபநாசம் படித்துறை கட்டுவதற்கும், தனிகற்பாளங்களால் செய்யப்பட்ட இந்த யானை பாலம் பயன்பெற்றதாக சிறப்பும் உண்டு. தவிர சித்திரை விசுநாளில் இவ்விரண்டு நதிகள் கூடும் இச்சதுக்கத்தில் தெள்ளிய மணலும், சிவலிங்க வடிவத்தில் சிறுசிறு கூழாங்கற்களும் கூடி இருந்தன. இந்த மணற்பரப்பில், உற்றார் உறவினருடன் குடும்பம் குடும்பமாக சித்திரை விசு திருவிழாவினைமக்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். ராட்டினம் சர்கஸ்,கடைகள், சாப்பாடு என சந்தோஷமாய் கழித்து உள்ளனர். பின்னாளில் பாபநாசத்தில் பக்தர்களால் போடப்பட்ட அளவுக்கதிகமான பரிகாரத் துணிகள் மற்றும் வெள்ளக் கழிவுகளின் தேக்கத்தினால்,நாளடைவிலான வெள்ளம், இப்பகுதியின் மணற்பரப்புகள் மற்றும் சிறு சிறு கூழாங் கற்ககளை இல்லாமல் ஆக்கி விட்டது. அதோடு யானைப்பாலத்தின் அருகில் புதிய காண்கிரீட் பாலம் அமைத்து புதிய சாலை போடப்பட்டதால் பழக்கத்தில் இருந்த பழைய சாலையும், வரலாற்று சிறப்புமிக்க யானைப் பாலமும் பயனற்ற நிலையில் செடி, கொடி,
மரங்கள் என முளைத்து, சிதில மடைந்து கேட்பாரற்று தற்போது உள்ளது. தமிழரின் தொன்மையையும், சரித்திரத்தையும் பரைசாற்றும் இப்புகழ்மிக்க யானைப்பாலத் தினை சீர்செய்ய வேண்டும்.
1.யானைப்பாலத்தின் மீது வளர்ந்துள்ள மரம் செடி கொடிகளை தூருடன் வெட்டி அப்புறப்
படுத்தி இனிஅதில்ஏதும் வளராத அளவிற்கு சிமிண்ட் வைத்து அடைத்து பாதுகாக்கவேண்டும்.
2. பாலத்தில் பெயர்ந்துள்ள கற்பாளங்களை சரியாக்க வேண்டும்.
3. கைப்பிடி சுவர் பெயர்ந்து விழும் சூழ்நிலையில் உள்ளது அதை செங்கல் கொண்டு கட்டி
சீர்செய்ய வேண்டும்.
4. வெள்ளை, பெயிண்ட் அடித்து வண்ணம் பூச வேண்டு இதை சரிசெய்து பயன்பாட்டிற்கு வரும்போது, இவ்விடத்தின் பழைய சாலையில் பொதுகழிப்பிடமாக மக்கள் பயன்படுத்தி வரும் நிலை மாற்றப்பட்டு நிறுத்தப்படும்.இதன் மூலம் மலம்ஜலம் ஆற்றில் அதிகமாகச் சேர்ந்து வருவது தடுக்கப்படும். இப்பணியைச் செய்து முடிக்க அனைவரையும் அழைக்கிறோம்.
கிரிக்கெட்மூர்த்தி
Asst. Director of Statistics (Rtd)
சுற்றுச்சூழல் ஆர்வலர்
பாபநாசம், விக்கிரமசிங்கபுரம்


