தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சிறப்பு முயற்சியில் சி.எஸ்.ஆர் நிதி மூலம் காசநோயாளிகளுக்கு சத்துமாவு வழங்கும் நிகழ்ச்சி கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் டாக்டர்.ப.ரவீணா தலைமை தாங்கினார்.
எக்ஸ்ரே நுட்புனர் திரு.நே.கிறிஸ்டின் குமாரதாஸ் முன்னிலை வகித்தார்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அனைவரையும் வரவேற்று பேசினார்.
மருத்துவ அலுவலர் டாக்டர்.ப.ரவீணா காசநோயாளிகளுக்கு சத்துமாவு வழங்கி பேசுகையில்,
காச நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை மட்டுமல்லாமல் சிகிச்சை காலங்களில் அவர்கள் சத்தான உணவு உண்ண வேண்டும்.
இதன் அடிப்படையில்,
காச நோயாளிகளுக்கு உடல் எடை குறியீடு எனப்படும்
பி.எம்.ஐ. 18.5 க்கு கீழ் உள்ள காச நோயாளிகள் அனைவரும் குறைந்த எடையாளராக கருதப்பட்டு அவர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., சிறப்பு முயற்சியில் சி.எஸ்.ஆர். நிதி மூலம்
சத்துமாவு வழங்கப்படுகிறது.
இந்த சத்து மாவானது காசநோயாளிகளுக்கு தொடர்ந்து ஆறு மாதம் வழங்கப்பட்டு நோயாளிகளின் எடை அளவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஏற்பாடு செய்து கொடுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் பொது சுகாதாரத் துறையின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்கள்.
இடைநிலை சுகாதார செவிலியர் திருமதி.ம.தனலெட்சுமி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


