தூத்துக்குடியில் கோிபேக், கப் போன்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பொியசாமி வேண்டுகோள் விடுத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டல வாரியாக நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் கிழக்கு மண்டலங்களில் பெறப்பட்ட மனுக்களில் தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான 101 பேருக்கு ஆணைகளை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து ேமயர் ஜெகன் பொியசாமி வழங்கி பேசுகையில் “மக்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்கிறோம் என்ன கோாிக்கை அளித்தாலும் அதையும் நிறைவேற்றி தருகிறோம் மக்களிடம் நாங்கள் கேட்பது ஓன்றே ஓன்றுதான் பாலித்தீன் கோிபேக் கப்புகள் உள்பட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் பக்கிள்ஓடையில் அடைப்புக்கு மெயின் காரணமாக கோிபேக் இருந்து வருகிறது.
அதே போல் கட்டடிட கழிவுகளையும் சாலையில் போட்டுவிடுகின்றனா். இதுவும் ஓரு பிரச்சனையாக உள்ளது. அதையும் தவிா்க்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் 3000 சாலைகள் போடப்பட்டுள்ளது. புதிதாக 974 சாலைகள் அமைக்கப்படவுள்ளன. வீட்டிற்கு ஓரு மரம் வளர்க்க வேண்டும் எல்ேலாரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாம் வரும் 14ம் தேதி வரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறுகிறது. அதிலும் 13 துறைகளின்மூலம் 43 திட்டங்களில் பயன்பெறலாம் இதையும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
உடன் மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், உதவி ஆணையர் வெங்கட்ராமன், மாநகராட்சி சுகாதாரகுழு தலைவா் சுரேஷ்குமார், கவுன்சிலா்கள் ரெக்ஸின், கனகராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா், பிரபாகா், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பலா் கலந்து கொண்டனா்.


