உழக்குடி, வடக்கு காரசேரியில் மாற்றுக்கட்சியில் இருந்த விலகி பாஜகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள கருங்குளம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட உழக்குடி மற்றும் வடக்குக் காரசேரி ஆகிய கிராமங்களில் இருந்து இன்றைய தினம் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு ஐயப்பன், கிளை பிரதிநிதி செந்தூர் பாண்டியன், திமுக உறுப்பினர் ஆனந்த முத்துப்பாண்டி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி நிர்வாகி முருகையா ஆகியோர் பாஜக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு மற்றும் ஒன்றிய தலைவர் நங்கமுத்து ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜகவினர் கலந்து கொண்டனர்.


