விளாத்திகுளம் அருகே வைகாசி கொடை விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிங்கிலிபட்டி மற்றும் கல்குமி கிராம மக்களின் சார்பாக வைகாசி கொடை விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தில் 27 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிங்கிலிபட்டி கிராம தர்மகர்த்தா முத்து கண்ணன், கல்குமி கிராம தர்மகர்த்தா கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், ஆற்றங்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், N.வேடப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லக்குமார், கிளைச் செயலாளர் கருப்பசாமி (எ)கோபால், சூரங்குடி முன்னாள் கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன் கழக நிர்வாகிகள் சிங்கிலிபட்டி பேச்சியப்பன் மருதுபாண்டியன் உட்பட ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


