தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஜாகிர் உசேன் நகரில் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி ஜாகிர் உசேன் நகரில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏராளமான குடிநீர் வால்வுகள் உள்ளன. சிலர் கூடுதலாக இணைப்புகளை தோண்டி எடுத்துள்ளனர். இதனால் கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் சீரான குடிநீர் வழங்கவில்லை இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


