ஸ்ரீவைகுண்டம் அருகே ஒரு நாள் மழையில் பாலம் அமைக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் இடிந்து விழுந்தது. போக்குவரத்து துண்டிப்பு. கிராம மக்கள் வெளியே வர முடியாமல் தவிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் மழையின் காரணமாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள சத்தக்காரன் பட்டியில் பாலம் அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட தற்காலிகமாக பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
சத்தக்காரன் பட்டியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சத்தக்காரன்பட்டி பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. அந்த சமயத்தில் ஊருக்குள் பொதுமக்கள் சென்று வர தற்காலிகமாக குழாய்கள் மூலம் பாதைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் பெய்து வந்த தொடர் மழையால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் பாலத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது.
இதனால் ஊருக்குள் உள்ள பொதுமக்கள் காலை முதல் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
உடனடியாக இந்த பாலத்தை சரி செய்து போக்குவரத்து நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


