சென்னையில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிளாசிட்டு நாவல் அறிமுக விழா நடந்தது.
இராம செ. சுப்பையா நினைவு அறக்கட்டளையின் 2024க்கான புதினப்போட்டி பரிசளிப்பு விழா மற்றும் நாவல்கள் அறிமுக விழா சென்னை கோடம்பாக்கம் படைப்பு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் இறுதியாக 10 நாவல்கள் குறும் பட்டியலில் இடம் பிடித்தது. இதில் முதல் பரிசு ஜெயா நவி எழுதிய “வெந்து தணியாத வெண் பாஸ்பரஸ்”, இரண்டவது பரிசு பாலஜோதி இராமசந்திரன் எழுதிய “சுரங்க பாதையில் ஓவியம்”, மூன்றாவது பரிசு அண்டனூர் சுரா எழுதிய “வேங்குடி வயல்” ஆகிய நாவல்கள் பெற்றது. இதில் வெற்றி பெற்ற மூன்று நாவலாசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும், குறும்பட்டியலில் இடம் பெற்ற நாவல்கள் எழுதிய ஆசிரியர்களை சிறப்பித்து, நூல்களை அறிமுகம் செய்யும் விழா நடந்தது. நாற்க்ரம் பதிப்பகம் பதிப்பாளர் நல்லு ஆர். லிங்கம் வரவேற்றார். திரைக்கலைஞர் ரேகா நாயர் நிகழ்ச்சி தொகுத்தார். பக்ரன் அவள் எக்ஸ்பிரஸ் நிறுவனர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். கருமாண்டி ஜங்ஷன் யூ டியூப் சேனல் எழுத்தாளர் அதிர்தம் சூர்யா தொடக்க உரையாற்றினார். பரிசளித்துப் பாராட்டுரையை இராம செ . சுப்பையா நினைவு அறக்கட்டளை நிறுவனர் எழுத்தாளர் தேவா சுப்பையா வழங்கினார். நடுவர்களாக பணியாற்றிய எழுத்தாளர்கள் கோமதி சங்கர், சோ. பாலகுமார், கணேஷ் பாலா, பிரசன்னா, ரிஷபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நாவலாசிரியர்கள் ஜெயா நவி, அண்டனூர் சுரா, நயினார், தி.குலசேகர், தி. வள்ளி, பாலஜோதி இராமசந்திரன், பெரணமல்லூர் சேகரன், ராஜிலா ரிஸ்வான், பிர்தவ்ஸ் ராஜகுமார் ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள்.

முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிளாச்சிட்டு நாவல் இந்த போட்டியில் குறும்பட்டியலில் இடம் பெற்றிருந்தது. எனவே நாவல் ஆசிரியரை பாராட்டி, நூலை அறிமுகம் செய்து, ஆசிரியருக்கு நினைவு பரிசு வழங்கினர். ஆசிரியர் வர இயலாத காரணத்தினால் அவரது துணைவியார் பொன்சிவகாமி காமராசு நினைவு பரிசை பெற்றுக்கொண்டார்.


