திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் நேற்று தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வசவப்பபுரத்தில் இயங்கி வரும் தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது தனது 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் மற்றும் மணிபர்சை ஏடிஎம் மையத்தில் மறந்து வைத்து விட்டு சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த விஜய் சண்முகம் என்பவர் நெல்லைக்கு சென்றுள்ளார். பணம் எடுப்பதற்காக வசவப்பபுரத்தில் உள்ள அந்த ஏடிஎம் மையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு கிடந்த அங்கு கேட்பாறற்று கிடந்த மணி பர்சையும், ஸ்மார்ட் போனையும் எடுத்து அருகில் உள்ள முறப்பநாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
உடனே போலிசார் போனை தொலைத்தவரை தொடர்பு கொண்டு போனின் உரிமையாளரிடம் முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் ஒப்படைத்தார். மேலும் கீழே கிடந்த போனையும், மணி பர்சையும் எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த விஜய் சண்முகத்தை போலிசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.


