கோவில்பட்டியில் பசுமை இயக்கம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கோவில்பட்டி பசுமை இயக்கம் சார்பில் முத்தானந்தபுரம் தெருவில் உள்ள கொண்டையராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாணவர்களிடம் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன், ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி முருகபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி பசுமை இயக்க தலைவர் ஜெகஜோதி கலந்து கொண்டு மழை சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார். இதில் ஓவிய ஆசிரியை முத்துகோமதி உள்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


