தூத்துக்குடியில் ஸ்பிக்நகர் ரோட்டரி சங்கம் சார்பில் இருதய பரிசோதனை முகாம் நடந்தது.
தூத்துக்குடி ஸ்பிக்நகர் ரோட்டரி சங்கம், ஏ.எம் பவுண்டேசன், திருநெல்வேலி காவேரி மருத்துவமனை சார்பில் ஸ்பிக் நகரில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடந்தது. முகாமினை மேனாள் துணை ஆளுநர் மயில். பாலசுப்ரமணியன், ஸ்பிக் நிறுவணத்தின் முழு நேர இயக்குநர் பாலு ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருநெல்வேலி, காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் கிடியோன், பர்ஹானா ஆகியோர் பொதுமக்களுக்கு இருதய பரிசோதனை செய்தனர்.
துணை ஆளுநர் பொதிகை கண்ணன், முகாம் இயக்குநர் பாலமுருகன், ஸ்பிக் நகர் ரோட்டரி சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 96 பேர் கலந்துகொண்டதில் எக்கோ பரிசோதனை 24 பேரும் இசிஜி பரிசோதனை 41 பேரும் செய்து கொண்டனர். இதில் சாதாரண பரிசோதனைகளான உயரம், எடை, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு. ஆகியவற்றை ஏராளமான பொதுமக்கள் செய்து கொண்டனர்.


