தூத்துக்குடியில் மோட்டார் பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர், மாதா நகர் 1வது தெரு சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மகாராஜா (42). இவர் கடந்த 24ம் தேதி தனது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது. இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தாளமுத்து நகர், ராம்தாஸ் நகரை சேர்ந்த சம்சுதீன் மகன் பீர் முகம்மது (21) என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.


