ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் ஆதிச்சநல்லூர் தொல்லியல்களம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி என். எஸ். எஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அங்கு சென்ற மாணவர்களை ஆதிச்சநல்லூர் தொல்லியல் களபணியாளர் வெங்கடேஷ் வரவேற்றார். மாணவர்கள் தொல்லியல்களத்தை சுற்றியுள்ள இடங்களையும் ஆற்றின்கரையோர இடங்களையும் தூய்மைபடுத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவில் மரங்கள் நடப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமைஆசிரியர் முத்துசிவன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், அழகுசெல்வம், சிவகளை பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி என்.சி.சி ஆசிரியர் மாணிக்கம் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாட்டை என்.எஸ்எஸ் அலுவலர் முருகன் செய்திருந்தார்.


