செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் உலக முதியோர்கள் தினவிழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியலீலா மற்றும் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட வட்டார மேலாளர் மல்லிகா மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியலெட்சுமி, பானுமதி, கிரேஸ், சுடலி, பேச்சித்தாய், வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். மரம் நடுவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் குழுக்களில் உள்ள முதியவர்கள் கலந்து கொண்டனர்.


