பொருநை நாகரீகத்தினை கண்டுபிடித்த தமிழக அரசு, லெமுரியா கண்டத்தினையும் ஆய்வு செய்ய வேண்டும். கொற்கையை பார்வையிட்ட பாலபிரஜாதிபதி அடிகளார் கோரிக்கை
பொருநை நாகரீகத்தினை வெளிக்கொண்டு வந்த தமிழக அரசு லெமுரியா கண்டத்தினையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று பாலபிரஜாதிபதி அடிகளார் கோரிககை விடுத்துள்ளார்.
சாமிதோப்பு குருமகா சன்னிதானம் பாலபிரஜாதிபதி அடிகளார் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகிய தொல்லியல் களங்களை பார்வையிட தூத்துக்குடி மாவட்டம் வருகை தந்தார். அவரை சிவகளை தொல்லியல் களம் சார்பில் ஆசிரியர் மாணிககம், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர் உள்பட பலர் வரவேற்றனர்.
அவர் ஆதிச்சநல்லூரில் புளியங்குளம் முதுமக்கள் தகவல் மையத்தில் ஆய்வுக்கு வைக்கப்பட்ட பொருள்களை பார்வையிட்டார். அதன்பின் அங்குள்ள ஆய்வாளர்களிடம் இதுகுறித்து கேட்டறிந்தார்.
ஏரல் தாலூகா சிவகளையில் அகழாய்வு செய்யப்பட்ட குழிகளை பார்வையிட்டார். அதன் பின் கொற்கையில் 2500 வருடங்கள் பழமையான வன்னிமரம் மற்றும் அகழாய்வுககாக தோண்டப்பட்ட குழிகளை பார்வையிட்டார். ஆய்வாளர்கள் அவருககு கொற்கையின் பழமைய குறித்து தகவல் தெரிவித்தனர்.
அதன்பின் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, கீழடியை தொடர்ந்து இடைச்சங்கமாக திகழ்ந்த பொருநை நகரீகத்தினை வெளிக்கொண்டு வந்த தமிழக அரசை பாராட்டுகிறேன். கடந்த வருடம் ஆய்வு செய்த சிவகளை ஆய்வாளர்கள், தமிழக தொல்லியல் துறைமூலமாக 1 வருடத்தில் அங்கு கிடைத்த உமியைகொண்டு இங்குள்ள நாகரீகம் 3200 வருடம் என நிரூபித்து இருப்பது. தமிழனின் தொன்மையை அறிவியல் மூலமாக நிரூபித்த ஒன்றாக மாறிவிட்டது. எனவே தமிழக முதல்வரையும், தமிழக தொல்லியல் துறை அமைச்சரையும் தொன்மையான தமிழ்குடி மக்கள் சார்பில் பாராட்டுகிறேன். இந்திய வரலாற்றை பொருநைக்கரையில் இருந்து தான் எழுத வேண்டும் என்று கூறிய முதல்வர் லெமுரியா கண்டத்தினையும் ஆய்வு செய்ய வேண்டும். அங்குதான் தமிழனின் முதல் சங்கம் உள்ளது. அங்கு தமிழனின் தொன்மை தெரியும் போது உலக நாகரீகமே தமிழகத்தில் இருந்து தான் எழுதவேண்டும் என்ற நிலை ஏற்படும் என்று அவர் கூறினார்.
அவருடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, லெட்சுமிபுரம் காமராஜ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


