புதுக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் வட்டார அட்மா திட்டத்தின் விவசாய ஆலோசனை குழு கூட்டம் புதுக்குடியில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் வட்டார விவசாய ஆலோசனை குழு ஒருங்கிணைப்பாளர் ஊமத்துரை சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீவைகுண்டம் கால்நடை உதவி இயக்குனர் பூதலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் வட்டார விவசாய ஆலோசனை குழு 36 வருட வருவாய் கிராமத்தில் இருந்து 20 முன்னோடி விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர் மகேஷ்மூர்த்தி, திருப்புளியங்குடி காயத்ரி, சிவகளை சண்முகம், ஏரல் ஜெயமுருகன், சாயர்புரம் மணி சுடலை, செல்வபிரபு, மகேஸ்வரி ஆகியோர் உதவியுடன் தேர்வு செய்யப்பட்டனர். மற்றும் விவசாய ஆலோசனைக் குழு உறுப்பினராக மணி, காசி சண்முகம், பெருமாள், முருகேசன், மகேஷ்குமார், கணேஷ், ஆம்ஸ்ட்ராங் பாஸ்கர், பட்சிராஜன், சுந்தரபாண்டியன், முத்துராஜ், துறைபாலமுருகன், பென்சிங், ராமலட்சுமி, ஜெகதீசன், புஷ்கரவேல், அய்யாத்துரை, கதிரவன், பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்டார அட்மா திட்டத்தின் வட்டார விவசாய ஆலோசனை குழு சேர்மனாக ஸ்ரீவைகுண்டம் நகர திமுக செயலாளர் பெருமாள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைவரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து சால்வை அணிவித்து கௌரவித்தனர்.


