ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகத்தில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் ஆலோசனைப்படி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகத்தில் சிவாஜியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த விழாவுக்கு வட்டாரத் தலைவர் நல்லகண்ணு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சீனி ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் அலங்கார பாண்டியன் ஆகியோர் முன்னிலை வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சித்திரை, நகரச் செயலாளர் நிலமுடையான், வட்டார துணைத்தலைவர் புகாரி, வட்டாரச் செயலாளர் மதி சேகரன், மகளிர் அணி தலைவி மங்கலச்செல்வி, மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் உதயா, பத்திரகாளி, அன்னபூரணி, பிரேமா, சசிகலா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


