தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பண்ணைவிளைபுதூர், கொற்கை மணலூர், உமரிக்காடு, வாழவல்லான், கணபதி சமுத்திரம், கூட்டாம்புளி, பண்டாரவிளை உள்பட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடந்து வந்தது.
நேற்று தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடந்தது. இதனையடுத்து ஏரல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள அனைத்து சிலைகளும் ஏரல் பஜார் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பஜார் பகுதியில் மேளதாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதபின்னர் ஏரல் தாமிரபரணி ஆற்றுப்படுகை பகுதியில் அனைத்து விநாயகர் சிலைகளும் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர் ஏரல் தாமிரபரணி ஆற்றில் பக்தர்களால் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


