சென்னை ஐ.டி. ஊழியர் கவின் கொலைச் சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தில் கவின் செல்வக ணேஷின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கவின் கொலை மிகவும் கண்டிக்கத்தக்கது வருந்தத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் நடைபெறக்கூடாது. அதற்காக அரசு தனி சட்டம் கொண்டுவர வேண்டும். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் கவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


