தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து எம்பவர் இந்தியா நுகர்வோர் & சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர், மேயருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் புதிய தண்ணீர் இணைப்புக்காக பைப்புகள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகள் நடைபெறும் இடங்களில் வேலை நடைபெறுவது குறித்த போர்டுகள், ரிப்ளெக்டர் ஸ்டிக்கருடன் கூடிய டேப்கள் மற்றும் கம்பங்கள் ஆகியவற்றை உடனடியாக அமைத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


