தூத்துக்குடி, நாசரேத் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பழைய பேரூந்து நிலையம் முன்பு மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் பிரம்மாண்ட கேக் வெட்டி, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கு மற்றும் பார்வையற்றோர் இல்லங்களுக்கு மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி வண்ணார் 2வது தெருவில் 42வது வட்ட திமுக சார்பில் நடைபெற்ற விழாவிற்கு தண்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா திமுக கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் மாநகராட்சி கவுன்சிலர் அன்னலட்சுமி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாசரேத்தில் …
நாசரேத் திருவள்ளுவர் காலனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாள் விழா வார்டு செயலாளர் கருத்தையா தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் இந்திராணி முன்னிலை வகித்தார். மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜமீன் சாலமோன் திமுக கொடியேற்றினார். விழாவில் மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன், வார்டு செயலாளர் சேகர், மனோகரன் மற்றும் சத்தியமூர்த்தி, திருமணி, இளங்கோ, வீரமணி, ரமேஷ், இந்திரா, குமார், வினோத்விஜயன், ராமசாமி, பாக்கியலெட்சமி, மலர் புஷ்பராணி, ஷீபா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது