தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் எனும் கிராமத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டபட்ட பழமையான சிவாலயம். ஸ்ரீபதஞ்சலி முனிவராலும் புலிக்கால் சித்தர் வியாக்ரபாத முனிவராலும் பூஜைகள் செய்து வழிபட்ட பழைமையான சிவலிங்கம் தென் தில்லை என்று சொல்லப்படும் சிவாலயம் ஆன்மீக அன்பர்களாலும் சிவனடியார்களின் உழைப்பாலும் கிராம மக்களின் ஒத்துழைப்பாலும் புணரமைக்கப்பட்டு 2013ம் ஆண்டு கும்பாபிஷேகம் சீறும் சிறப்புமாக நடைபெற்றது. 12 வருடம் ஆவதால் அடியார் பெருமக்கள் முயற்ச்சியாலும் மற்றும் துறையின் அனுமதியோடும் 2025ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் வரும் ஞாயிறு அன்று மார்ச் மாதம் 2 தேதி மாசி மாதம் 18ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு மேல் 7 மணிக்குள் விமான பாலாலயம் நடைபெற இருப்பதால்..ஊர் பொதுமக்களும் அடியார்களும் கலந்து இந்நிகழ்வுகளை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்


