தூத்துக்குடியை சேர்ந்த எழுத்தாளர் நெய்தல் ஆண்டோ அவர்களுக்கு தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது.தூத்துக்குடியில் வசித்து வரும் இவர் இதுவரை 21 நூல்கள் எழுதியுள்ளார். கலைஞர், வசந்த் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். வத்திக்கான் வானொலியல் பேசியவர். கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாள், கருத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், பள்ளி ஆசிரியர் என பன்முகம் கொண்ட இவருக்கு தமிழக அரசு தமிழ்ச்செம்மல் விருது கொடுத்த கௌரவித்து உள்ளது. சென்னையில் நடந்த விழாவில் இந்த விருதை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சுவாமி நாதன் வழங்கினார்.
தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அருள் உள்பட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். தமிழ்ச்செம்மல் நெய்தல் ஆண்டோவை தூத்துக்குடி தொடுவானம் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்பும் எழுத்தாளர்களும் பாராட்டி உள்ளனர். தமிழ்ச்செம்மல் விருது பெற்ற நெய்தல் ஆண்டோ அமைச்சர் கீதா ஜீவனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். நெய்தல் ஆண்டோவுக்கு விரைவில் தூத்துக்குடி எழுத்தாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.


