கருங்குளம் வெங்டேஸ்வரா பெட்ரோல் பல்க்கில் புதிய வருட பிறப்பை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு 2016 இலவச மரக்கன்று வழங்கப்பட்டது. இந்த மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராக துவக்கி வைத்தார். உரிமையாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் எரிபொருள் சேமிப்பு, சுற்றுபுறச்சுழல் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதியவருடத்தில் மரக்கன்றை ஆர்வத்துடன் வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர்.இந்த மரக்கன்று நட்டு வளர்த்து அதன் புகைப்படத்தினை மூன்று மாதம் கழித்து பல்க் உரிமையாளரிடம் வழங்கினால் அதற்கும் பரிசு வழங்கப்படும் என பன்னீர் செல்வம் தெரிவித்தார்.


