காவ்யா பதிப்பகம் சார்பில் சென்னை கோடம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டலில் 12 புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தங்களை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். இதில் முத்தாலங்குறிச்சி காமராக எழுதிய நெல்லை சீமையில் கிறித்தவம் என்ற நூலும்வெளியிடப்பட்டது. இந்த நூலை அயோத்தி திரைப்பட இயக்குனர் மந்திர மூர்த்தி, சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்கம் சார்பில் பவள விழா நாயகன் காவ்யா சண்முகசுந்தரம், கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் சங்கர் மணி, திரைப்பட உதவி இயக்னுர் ரூபன், டாப் டிவி ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காவ்யா சண்முக சுந்தரம் தலைமையில் காவ்யா பதிப்பகம்செய்து இருந்தது.


