செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது
கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் அன்சலாம் ரோஜர் முன்னிலை வகித்தார். செய்துங்கநல்லூர் மத்திய மக்கள் தொடர்பு அலுவலக கள விளம்பர அலுவலர் போஸ்வெல் ஆசிர் வரவேற்றார். நிதிசார் கல்வி ஆலோசகர் மகாலிங்கம் தொழீல் முனைவோருக்கான அரசின் திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்கள் குறித்து மாணவர்களிடம் விளககினார். இதில் முத்ரா உள்பட பல திட்டங்கள் பற்றி விவரிக்கப்பட்டது. இதில் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இயந்திரவியல் துறை தலைவர் ஆறுமுக சேகர் நன்றி கூறினார். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோருககான அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது


