கருங்குளம் அருகே உள்ள தெற்கு காரசேரயில் இலவச புற்று நோய்கான விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் மாடத்தி தலைமை வகித்தார். தெற்குகாரசேரி ஊராட்சி மன்ற தலைவர் பேபி , தமிழ்நாடு ஊராட்சி சங்க கருங்குளம் ஒன்றிய தலைவர் சுரேஷ் துணைதலைவர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் இலவச மருததுவத்துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்றார். சென்னை உதவும் உள்ளங்கள் மருத்துவ அலுவலர் அபிராமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கேன்சர் நோய் கண்டறியும் சோதனை நடத்தினார். மேலும் கேன்சர் நோய் பரவாமல் இருக்க விழிப்புணர்வு முகாம் நடத்தப் பட்டது.
மையத்தலைவர் பார்வதி, கழுத்தலைவர் முப்பிடாதி, லெட்சுமி, ஊராட்சி மன்ற உறுப்பினர் மீனா, «ப்சியம்மாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் சரஸ்வதி நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை நெல்லை கேன்சர் கேர் சென்டர், கோபால சமுத்திரம் கிராம உதயம் இணைந்து செய்திருந்தது.


