செய்துங்கநல்லூர் அன்னதான சத்திரம் அருகில் துப்புறவு பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு அருகில் உள்ள பெரிய வாய்க்காலில் இருந்து நேற்று காலை 10மணிக்கு மலைபாம்பு ஒன்று கடந்து, அருகில் உள்ள குளத்துக்கு செல்ல முயற்சித்தது. அதை கண்ட துப்புறவு பணியாளர் செல்வி என்பவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வல்லநாடு வனத்துறையை சேர்ந்த வனக்காப்பாளர் சுமதி, வனக்காவலர் லட்சுமணன் ஆகியோர் அங்கு வந்து அந்த மலை பாம்பை கைபற்றி, வல்லநாட்டு மலையில் விட்டனர். சுமார் 7 அடி நீளமுடைய இந்த மலைபாம்பு இப்பகுதியில் பிடிப்பட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.