வெள்ளூர் நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் சிவகாமி அம்மாள் கோயில் மாசித் திருவிழவை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளுர் நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் கோவிலில் மாசித்திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு மராத்தான் போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் ஆண்களுக்கான மாரத்தான் போட்டியை ஓய்வு பெற்ற ஐஜி மாசானமுத்து மற்றும் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்கள் வெள்ளூரில் இருந்து மணல்விளை வரை 21 கிலோமீட்டர் சென்று திரும்பினர். இதில், முதல் இடத்தை பசுபதியும், இரண்டாம் இடத்தை முருகனும், மூன்றாம் இடத்தை தங்கதுரையும் பெற்றனர்.
பெண்களுக்கான மாரத்தான் போட்டியை விவசாய சங்கத் தலைவர் அலங்காரம் மற்றும் திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பெண்களுக்கான மாரத்தான் போட்டி வெள்ளூரிலிருந்து கெட்டியம்மாள்புரம் வரை 7 கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பினர். இதில், முதலிடத்தை ரம்யாவும், இரண்டாமிடத்தை ஐஸ்வர்யாவும், மூன்றாம் இடத்தை முருகேஸ்வரியும் பெற்றனர்.


