நவதிருப்பதிகளில் தலங்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நவதிருப்பதி ஸ்தலங்களில் 9 வது ஸ்தலம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில். மூலவர் ஆதிநாதர் ஆழ்வார், உற்ச்சவர் பொலிந்துநின்ற பெருமான் ஆவார். இங்குதான் நம்மாழ்வார் அவதரித்தார். இந்த கோவிலில் நம்மாழ்வாருக்கு தனி சன்னிதி உள்ளது. மூலவர் நம்மாழ்வார் தாமிரபரணி நதியில் தீர்த்தத்தை எடுத்துவந்து காச்சவும் மாசி மாதம் உற்ச்சவர் நம்மாழ்வார் தோன்றினார். அதை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 11 நாட்கள் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி நம்மாழ்வாருக்கு காலையில் விஸ்வரூப தரிசனம் திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டியும் நடைபெற்றது. அதன்பின்பு இன்று காலை கொடியேற்றம் நடந்தது. சுவாமி நம்மாழ்வார் தினமும் காலை வீதிபுறப்பாடும், திருமஞ்சனமும், கோஷ்டி வகையறாவும் உத்திராதிமடம் வானுமலைமடம், திருக்குருங்குடிமடம் கண்ணாடிமடம், ஸ்ரீபராங்குசமண்டபம் உடையவர் சன்னதி ஆகியவற்றில் நடக்கிறது. மாலையில் தினமும் பல்வேறு வாகனகளில் வீதி புறப்பாடு நடக்கிறது. 5ம் திருவிழாவை முன்னிட்டு கருடவாகனத்தில் சுவாமி பொழிந்து நின்றபிரான் கருடசேவை நடக்கிறது.
மார்ச் 1 ஆம் தேதி 9ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளுகிறார். காலை 9 மணி அளவில் தேரோட்டம் நடக்கிறது. 2 மற்றும் 3 ந்தேதிகளில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி, தர்க்கார், ஸ்ரீஆதிநாதர் ஆழ்வார் கைங்கரியசபா தலைவர் ஆகியோர் செய்து வருகிறார்கள்.


