.
செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முத்துகிருஷ்ணன். இவர் தென்காசி மாவட்டத்துக்கு பணி மாறுதல் ஆகி செல்கிறார். இவருக்கு பாராட்டு விழா செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி பிலிப் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சப்இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணனை பாராட்டி பொன்னாடை போர்த்தினர். செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், வி.கோவில்பத்து பஞ்சாயத்து தலைவர் கொம்பையா, சமூக சேவகர் சுடலை முத்து, ஊராட்சி செயலர் சங்கரபாண்டியன், தாதன்குளம் சுடலைமுத்து, உள்பட பலர் கலந்துகொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் முருகன் நன்றி கூறினார்.


