ஸ்ரீவைகுண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல் மூடைகளை விற்பனைக்காக கொண்டு செல்லும்போது சந்தைப்படுத்துதல் கட்டணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மூன்று மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய திருநெல்வேலி ஒழுங்குமுறை விற்பனை குழு மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களான நெல், பருத்தி, உளுந்து, நிலக்கடலை, மல்லி மற்றும் வத்தல் ஆகியவைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு செல்லும் போது ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
போதிய விளைச்சல் இல்லாமல் நஷ்டம் அடைந்து வரும் விவசாயிகளிடம் சந்தைப்படுத்துதல் கட்டணத்தை வசூலிக்க கூடாது என வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரனிடம் தெற்கு மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் முருகேசன் தலைமையிலான விவசாயிகள் வலியுறுத்தினர்.
அரசின் விதிமுறைக்கு உட்பட்டு சந்தைப்படுத்துதல் கட்டணம் வசூலிக்கப்படுவது அதனை நிறுத்த முடியாது என அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளிடம் வசூலிக்கும் சந்தைப்படுத்தல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


