செய்துங்கநல்லூரில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடந்தது. இதையட்டி காவல்நிலையம் எதிரில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், கருங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் கோமதி ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன், ஐயப்பன், முருகையா பாண்டியன், சுப்பையா பாண்டியன், கதிரரேசன், கனகராஜ், வெங்கிடாலச்சலம் , ஐயூப்கான், பாலமுருகன், மாரியப்பன், ஜான்சிராணி பாண்டியன், தென்னஞ்சோலை முருகன், அந்தோணி குமார், வல்லகுளம் கந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


