செய்துங்கநல்லூர் வயல் வெளியில் மலை பாம்பு பிடிபட்டது.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள கீழ தூதுகுழியில் கரையடியூரை சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான செம்பங்கி தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இவர் பூப்பறிக்க சென்றார். அப்போது அங்கு ஒரு மலைபாம்பு ஒன்று இருப்பதை கண்டார். உடனே அவர் வனத்துறையுடன் தொடர்ப்பு கொண்டார். வனச்சரகர் விமல் குமார் , வனவர் கேசவன் ஆகியோர் வழிகாட்டுதலில் வேட்டை தடுப்புகாவலர்கள் கந்தசாமி, சண்முகவேல் ஆகியோர் தூதுகுழி வந்து மலைபாம்பை பிடித்தனர். பின் மலைப்பாம்பு வல்லநாடு மலை பிரதேசத்தில் விடப்பட்டது.