செய்துங்கநல்லூரில் இந்திய தொழில் சங்க மையம் சார்பில் தெரு முனை பிரச்சாரம் நடந்தது.
விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மணி தலைமை வகித்தார். மார்சிஸ்ட் கம்னியூஸ்ட் ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். மத்திய மாநில அரசகுளின் மக்கள் விரோத தொழிலாளி விவசாயி விரோத கொள்கைளை எதிர்த்து தெரு முனை பிரச்சாரம் நடந்தது. இந்திய தொழில் சங்க மாவட்ட குழு சொ. மாரியப்பன் சிறப்புரையாற்றினார். ஊனமுற்றோர் சங்க ஒன்றிய தலைவர் மாடசாமி, ஒன்றிய செயலாளர் கெம்பையா, திருவை டெப்போ ஜீவானந்தம், வேன் ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் , ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.