வல்லநாடு அருகே உள்ள சென்னல்பட்டியில் உள்ள மயில் மீட்கப்பட்டது.
சென்னல்பட்டி முண்டன் கோயில் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் பெண் மயில் ஒன்று அடிப்பட்டு கிடப்பதை அவ்வூர் மக்கள் பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பசுமை தமிழ் தலைமுறை நிர்வாகி சுகன் கிறிஸ்டோபர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையை சேர்ந்த சங்கரலிங்கம், வேட்டை தடுப்பு காவலர் சரவணன் ஆகியோர் சென்னல்பட்டி வந்து மயிலை மீட்டு , வல்லநாடு கால்நடை மருந்தகத்தில் ஒப்படைத்தனர். அங்கு மயிலுக்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.