கோபாலசமுத்திரத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் உள்ள கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் கிராம உதயம் சார்பில் இலவச சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
இந்த கருத்தரங்கை கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் வரவேற்புரை ஆற்றினார். தனி அலுவலர் கணேசன் மற்றும் தன்னார்வத் தொண்டர் மைய தலைவர்கள், குழுத்தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


