முறப்பநாடு புதுக்கிராமத்தில் பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு நடந்தது.
கருங்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் மாநில விரிவாக்கத்திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்திட்டத்தின் மூலம் முறப்பநாடு புதுக்கிராமம் கிராமத்தில் பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) முகைதீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதன்பின்னர் அவர் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள் பற்றியும், நெற்பயிரில் சாகுபடி தொழில்நுட்பங்களை குறித்து பேசினார். வாகைகுளம் வேளாண் அறிவியல் மைய உழவியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் முருகன் நெற்பயிரின் சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பூச்சியில் துறை தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமார் நெற்பயிரில் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் குறித்தும் அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு கூறினார்.
பயிற்சியின் முடிவில் வல்லநாடு வேளாண்மை விரிவாக்க மைய துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார்.
பயிற்சியில் முறப்பநாடு புதுக்கிராமம் விவசாயிகள் கலந்து கொண்டனர். பண்ணைப்பள்ளிக்கான ஏற்பாடுகளை கருங்குளம் வட்டார உதவி வேளாண்மை அலுவலர் செல்வ சுந்தரம், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜேசுதாசன், உதவி தொழில் நுட்ப மேலாளர் பகவதி குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


