கருங்குளம் – கொங்கராயகுறிச்சி ஆற்றுக்கிடையே பாலம் கட்டவேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி ஒரு வருடம் ஆகி விட்டது. நெல்லை சந்திப்பில் இருந்து மார்க்கெட் செய்துங்கநல்லூர் கருங்குளம் வழியாக ஆறாம்பண்ணை மற்றும் கொங்கராயகுறிச்சிக்கு டவுண் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரை போக்குவரத்து கழகம் செவி சாய்க்கவில்லை. கொங்கராயகுறிச்சி மற்றும் ஆறாம்பண்ணை கிராம மக்களுக்கு ஒன்றிய அலுவலகம் செல்ல வேண்டும் என்றாலும் பாளையங்கோட்டை பகுதிக்கு ஆஸ்பத்திரி, கல்வி சம்பந்தமாக வரவேண்டும் என்றாலும் போக்குவரத்து மிக முக்கியம். தற்போது ஆற்றுபாலம் இருந்தும் கூட இரண்டு கிலோ மீட்டர் நடந்து வந்து கருங்குளம் சத்திரத்தில் பஸ் ஏறும் அவல நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற கொங்கராயகுறிச்சி &ஆறாம்பண்ணைக்கு நெல்லையில் இருந்து செய்துங்கநல்லூர் வழியாக அரசு டவுண் பஸ் இயக்க வேண்டும்.
எஸ். சாகுல் அமீது – கொங்கராயகுறிச்சி


