செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா கோயிலில் ஆடி பெருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அதையொட்டி முதல் நாள் மாலை 7 மணிக்கு சுந்தரபாண்டிய சாஸ்தா மற்றும் பேச்சியம்மாளுக்கு மகாப்பு பூஜை தீபராதனை நடந்தது. இரண்டாம் நாள் காலை 9 மணிக்கு கும்பாபிசேகம் நடந்தது. தொடர்ந்து பால் குடம் எடுத்து வரப்பட்டு, சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு மகா அபிசேகம் நடந்தது. தொடர்ந்து 12 மணிக்கு உச்சிகால அலங்கார பூஜை நடந்தது. அதன் பின் தேரில் சுவாமிகள் எழுந்தருளி வீதி உலா வந்தார். மும்பை அன்னதான அறக்கட்டளை மண்டபத்தில் வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவு 12 மணிக்கு சிறப்பு சாம பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தரபாண்டிய சாஸ்தா மும்பை அன்னதான அறக்கட்டளை செய்திருந்தது.