செய்துங்கநல்லூர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் வருகிற 29 ந்தேதி காலை 9.30 மணி முதல் 2 மணி வரை மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தங்கள் பகுதியிலோ, பள்ளியிலோ படிக்கும் 18 வயதிற்கு உள்பட்ட பார்வை குறைபாடு, செவித்திறன் மேம்பாடு, கை, கால் இயக்கக் குறைபாடு, மனவளர்ச்சிக் குறைபாடு உடைய குழந்தைகள் இருந்தால் அவர்கள் பாஸ்போர்டு அளவு போட்டோ 8, ரேசன் கார்டு ஜெராக்ஸ் 2, ஆதார் அட்டை ஜெராக்ஸ் 2 ஆகியவற்றுடன் வந்து கலந்துகொள்ளலாம்.
இதில் தேசிய ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை படிவம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஆதார் புகைப்படம் எடுத்தல், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை, கார்னர் சேர், வி.ஐ.பி சேர், ஊன்றுகோல், மூக்கு கண்ணாடி செவித்துணைக்கருவி, பராமரிப்பு உதவித் தொகை படிவம், இலவச அறுவை சிசிச்சை ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி, 6 வயதிற்குட்பட்டோருக்கான ஆரம்ப கால ஆயத்தப் பயிற்சி மையம், பகல் நேரப் பாதுகாப்பு மையப்பயிற்சி, வீட்டுப்பயிற்சி, ஆதார வளமையத்தில் இயன் முறைப்பயிற்சி ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சிக்கான ஆட்டோ பிரச்சாரம் செய்துங்கநல்லூர் பஜாரில் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கருங்குளம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையம் செய்து வருகிறது.


